இங்கிலாந்து மன்னரிடமிருந்து இலங்கை நபருக்கு வந்த கடிதம்

இங்கிலாந்து மன்னன் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு தாம் தயாரித்த வாழ்த்து அட்டையை இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அனுப்பி வைத்த நபர் தொடர்பில் கந்தளாய் பிரதேசத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நபர் வாழ்த்து அட்டையை தயாரித்து 300 ரூபாய் முத்திரைகளை ஒட்டி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ முத்திரையுடன் கூடிய கடித அட்டையில், அரசர் மற்றும் ராணியின் கையொப்பங்களுடன் அவருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் அனுப்பப்பட்டமை இங்கு விசேட அம்சமாகும்.
கடந்த 15ஆம் திகதி அவருக்கு நன்றி அட்டை கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)