இரண்டாவது முறையாகவும் தோல்வியில் முடிந்த ஜப்பானிய நிறுவனத்தின் விண்கலம் பாய்ச்சும் முயற்சி
ஜப்பானிய நிறுவனமான ‘ஸ்பேஸ் ஒன்’ பாய்ச்சிய விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கியது.
இந்நிறுவனம் டிசம்பர் 18ஆம் திகதியன்று மேற்கொண்ட விண்கலம் பாய்ச்சும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
விண்கலத்தைப் பாய்ச்சி விண்வெளியில் செயற்கைக் கோள் ஒன்றை ஏவிய முதல் ஜப்பானியத் தனியார் நிறுவனம் எனும் பெருமை தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் ‘ஸ்பேஸ் ஒன்’ இதுவரை இரண்டு முறை முயற்சி செய்துள்ளது.இரண்டும் தோல்வியில் முடிந்தன.
மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின்போது விண்கலம் நடுவானில் வெடித்துச் சிதறியது.
டிசம்பர் 18ஆம் திகதி பாய்ச்சப்பட்ட விண்கலம் வெடித்துச் சிதறவில்லை.அது பூமியில் விழுந்து நொறுங்கியது.
விண்கலம் பாய்ச்சப்பட்டதைக் காண கடலோரப் பகுதியில் திரண்ட பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
(Visited 41 times, 1 visits today)





