ஐரோப்பா செய்தி

லண்டனில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கத்திக்குத்து தாக்குதல் கடந்த திங்கட்கிழமை இரவு (08-01-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் ட்விக்கன்ஹாம் பகுதியில் உள்ள ஸ்ட்ராபெரி ஹில் ரயில் நிலையத்திற்கு பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் வரழைக்கப்பட்டனர். இதன்போது 21 வயதான இளைஞன் பலத்த காயத்துடன், கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தின் போது 16 வயது சிறுவன் ஒருவன் காலில் கத்திக்குத்து காயத்துடன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் அடையாளத்தை பொலிஸார் இதுவரையில் ஊடகங்களில் வெளியிடவில்லை. இது ஒரு இளைஞனின் சோகமான மரணத்தை ஏற்படுத்திய ஒரு அர்த்தமற்ற வன்முறைச் செயல் என உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

 

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி