செய்தி வட அமெரிக்கா

கனடாவில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவின் ரொறன்ரோவில் இரு வர்த்தக குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா சென்று அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த இளைஞனே நேற்று (14) சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், மீசாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய செல்வசிங்கம் சுலக்ஷன் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கனடா சென்று தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார். பின்னர் அவரது மகன் கல்வி கற்கும் வேளையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

தொழில் செய்யும் இடத்தில் இரு தொழிலதிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இந்த இளைஞன் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 25 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி