காஸாவில் புதை குழியாக மாறும் வைத்தியசாலை
இராணுவ மோதல்களுக்கு மத்தியில் காஸா பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் நிலை மிகவும் சோகமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இதேவேளை, காஸா நகரின் மிகப்பெரிய வைத்தியசாலையான அல் ஷிஃபா வைத்தியசாலையில் பாரிய புதைகுழி இருப்பதாகவும் சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் இறக்கும் நோயாளிகளும், குறைமாதக் குழந்தைகளும் மருத்துவமனையிலேயே இறந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 179 எனவும் அவர்களில் 30 பேரின் சடலங்கள் வைத்தியசாலையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், குறைப்பிரசவ குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக உழைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு தேவையான அரவணைப்பை வழங்க முடியாமல் மருத்துவர்கள் கடும் சிரமத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, அல் ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் இராணுவம் சுற்றி வளைத்துள்ளதால் யாரும் அங்கிருந்து வெளியேற முடியாது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.