இந்தியாவில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 17 பேர் உடல் கருகி பலி!
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சித்ரதுர்காவில் (Chitradurga) உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஸ்லீப்பர் பேருந்து ஒன்று லொறியுடன் மோதி தீப்பிடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தின் எரிந்த எச்சங்களிலிருந்து உயிர் பிழைத்தவர்களை வெளியே எடுக்கவும், உடல்களை மீட்கவும் மீட்புக் குழுக்கள் போராடி வருகின்றனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்வதாலும், காயமடைந்த பயணிகள் சிகிச்சையில் இருப்பதாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.





