அமெரிக்காவில் ரேடியோ கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ; குழந்தை உட்பட நால்வர் பலி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஹூஸ்டன் நகரில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ரேடியோ கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதியது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 4 பேரும் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். ஹெலிகாப்டர் இடித்த உடன் தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் கீழே விழும் கோரமான விபத்தின் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
(Visited 44 times, 1 visits today)





