லொறியில் சிக்கிய கைப்பை… தவறி விழுந்து பெண் உயிரிழப்பு!

நிட்டம்புவ, வத்துபிட்டிவல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பை லொறியில் சிக்கிய விபத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
லொறியில் கைப்பை சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் குறித்த லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (19) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 54 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)