பிரான்சில் இஸ்லாமிய வழிப்பாட்டாளர் மீது துப்பாக்கி பிரயோகம்!

பிரான்சில் நெரிசலான மசூதியில் இஸ்லாமிய வழிபாட்டாளர் ஒருவர் மீது துப்பாக்கி தாரி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தெற்கு பாரிஸ் புறநகர் பகுதியான Choisy-le-Roi இல் இன்று (16.06) காலை ஈத் அல்-அதா தொழுகையின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான நபரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் தாரி தப்பியோடியுள்ள நிலையில் திட்டமிட்ட கொலை முயற்சி என்ற போர்வையில் அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)