இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே தீவிரமடையும் விரிசல்
கனடாவும் இந்தியாவும் தூதர்களை நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளன.
கனடாவில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சீக்கியப் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் விவகாரம் தொடர்பில் இருநாட்டுக்கும் இடையிலான விரிசல் தீவிரமடைந்துள்ளது.
கனடாவில் உள்ள இந்தியத் தூதரும் ஐந்து பேராளர்களும் கனடிய மக்களுக்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ கூறினார்.
கனடிய பொலிஸார் அதற்கான ஆதாரத்தை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து இந்தியா கனடாவின் இடைக்காலத் தூதர் உட்பட 5 பேராளர்களை வரும் சனிக்கிழமைக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது.
(Visited 47 times, 1 visits today)





