ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் சவால் – பாதுகாப்பு செலவினங்களுக்காக மிகப் பெரிய தொகையை ஒதுக்கிய பிரித்தானியா!

பாதுகாப்பு செலவினங்களில் மிகப்பெரிய அதிகரிப்பை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
விளாடிமிர் புதினால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்டிய பிரதமர், இங்கிலாந்து ஒரு “தலைமுறை சவாலை” எதிர்கொள்கிறது என்றும் விளக்கியுள்ளார்.
2027 ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புக்காக அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.5% செலவிடும் என்றும் – அடுத்த பத்தாண்டுகளில் 3% செலவிடும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
அதற்காக வெளிநாட்டு உதவி பட்ஜெட்டில் இருந்து பில்லியன்களை குறைப்பதாக திரு ஸ்டார்மர் கூறினார்.
இங்கிலாந்தின் தேசிய பாதுகாப்புக்கு விளாடிமிர் புடின் ஏற்படுத்தும் ஆபத்து குறித்த தனது இருண்ட அறிவிப்பில், “நாம் நமது தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)