ஐரோப்பா செய்தி

பலஸ்தீன ஆதரவு – லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட 86 பேர் கைது

பலஸ்தீன நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒரு செயற்பாட்டாளருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய 86 பேர் கொண்ட குழுவொன்று, லண்டனில் உள்ள வோர்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறைச்சாலை (Wormwood Scrubs Prison) வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை மைதானத்தில் அத்துமீறல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்ததுடன், சிறை ஊழியர்கள் உள்ளே நுழைவதையும் வெளியேறுவதையும் தடுத்ததாகவும், பொலிஸ் அதிகாரிகளை (Police officers) அச்சுறுத்தியதாகவும் பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில போராட்டக்காரர்கள் சிறைச்சாலை கட்டிடத்தின் ஊழியர் நுழைவாயிலுக்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம், கடந்த ஆண்டு RAF பிரைஸ் நார்டன் (RAF Brize Norton) தளத்தில் விமானங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட உமர் காலித் (Umar Khalid) என்பவருக்கு ஆதரவாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ள நிலையில், தனது போராட்டத்தை தாக உண்ணாவிரதமாக (Hunger strike) மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!