ஹொரணையில் அனைவர் முன்னிலையிலும் திடீரென கடத்தப்பட்ட யுவதி!
ஹொரண பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் புகுந்த சிலர், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த யுவதி ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.
பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
எனினும், கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் ஊழியர்கள் பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, உடனடியாகச் செயற்பட்ட ஹொரண பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடத்தப்பட்ட யுவதியை கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்களில் கண்டுபிடித்ததுடன், சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)





