பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த சிறுமி – பிரமிக்கும் வெளிநாட்டவர்கள்
சர்வதேச செஸ் ஒலிம்பிக்போட்டியில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹாரோவைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமி, தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான மகளிர் அணியில் போத்தனா சிவானந்தன் இடம்பிடித்துள்ளார்.
2015 இல் பிறந்த போதனா, கொரோனா காலத்தில் செஸ் விளையாட ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்குள், ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஐரோப்பிய எட்டு வயதுக்குட்பட்ட போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார்.
இந்த ஆண்டு, 10 வயதுக்குட்பட்ட உலகின் மிக உயர்ந்த தரவரிசைப் பெண் என்ற அந்தஸ்தை அவர் அடைந்துள்ளார்.
இவ்வாறாக புலம் பெயர் தேசத்தில் இருந்து செல்லும் சிறுவர்கள் பிரித்தானியாவில் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.