இந்தியாவில் 700 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி 10 நாள்களுக்குப்பின் மீட்பு

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயதுச் சிறுமி பத்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமையன்று (ஜனவரி 1) உயிருடன் மீட்கப்பட்டாள்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கோட்புத்லி மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சேத்னா என்ற அச்சிறுமி மீட்கப்பட்டதும் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள்.
அவளது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவளது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீரத்புரா எனும் சிற்றூரைச் சேர்ந்த சேத்னா கடந்த டிசம்பர் 23ஆம் திகதி தங்களது வேளாண் நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த 700 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள்.
அவளை மீட்கக் கடுமையாகப் போராடிவந்த நிலையில், மீட்கப்படுவதற்குச் சற்றுமுன் அவளது உடல்நிலை மோசமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
(Visited 11 times, 1 visits today)