ஐரோப்பா

இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்ட ஜெர்மன் இளைஞர்

தமிழக பெண்ணை ஜெர்மன் இளைஞர் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டார்.

சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஜெர்மனியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னையை சேர்ந்த ஹர்ஷிதா, ஜெர்மனிக்கு படிக்கச் சென்றபோது, அந்த நாட்டை சேர்ந்த டேவிட் ஹான்சயில்ட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில், நாளடைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்களின் இரு வீட்டாரின் பெற்றோர் சம்மதித்த நிலையில், நேற்று முன்தினம் ஜெர்மன் நாட்டு முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, இன்று தமிழக கலாச்சாரப்படி வேத மந்திரங்கள் முழங்க, ஹர்ஷிதாவுக்கு டேவிட் ஹான்சயில் தாலி கட்டி மனைவியாக ஏற்று கொண்டார்.

இந்த திருமணத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த உறவினர்கள் வேட்டி சட்டை, புடவை என தமிழக பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு வந்த நண்பர்கள் தமிழக கலாச்சாரமான மண்பாண்டங்களான பொருட்களை திருமண பரிசாக வழங்கி அசத்தினார்கள்.

திருமண பரிசாக அளித்த மண் அடுப்பு, மண்பானை, குடுவை உள்ளிட்ட மண்ணாலான பொருட்கள் அங்கு அனைவருக்கும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!