விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – ஒடிசாவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பாடசாலை மாணவர்கள்

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களில் பசையை சக மாணவர்கள் தடவியதால் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது வகுப்புத் தோழர்கள் விளையாட்டாக கண்களில் பசையைத் தடவி வைத்துள்ளனர்.
அந்த மாணவர்கள் காலையில் எழும்போது அவர்களின் கண்கள் அதிகப்படியான இரசாயனத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் எட்டு பேர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)