ஐரோப்பா

மரத்திலிருந்து கொட்டும் நீரூற்று… கிராமத்தில் தொடரும் அதிசயம்!- வைரலான வீடியோ

தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு கிராமத்தில் 150 வருட பழமையான மரத்திலிருந்து நீரூற்று மூலம் தண்ணீர் வெளியேறி வருவது உலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொண்டினீக்ரோவில் உள்ள டைனோசா கிராமத்தில் இந்த மல்பெரி மரம் உள்ளது. இந்த மரத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் நீரூற்று வெளிப்படுகிறது. அப்போது மரத்தின் துளையிலிருந்து நீரூற்று பீய்ச்சி அடிக்கிறது. இந்த ஆண்டு தற்போது அந்த நிகழ்வு நடக்கத் தொடங்கியுள்ளது.

சயின்ஸ் கேர்ள் என்ற ட்விட்டர் கணக்கில் இதுகுறித்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவில் “மாண்டினீக்ரோவில் உள்ள டைனோசா கிராமத்தில், சுமார் 150 ஆண்டுகள் பழமையான மல்பெரி மரம் உள்ளது. 1990களில் இருந்து இந்த மரத்தில் இருந்து தண்ணீர் பாய்கிறது. இது நிலத்தடி நீரோடைகளுடன் இணைகிறது. மேலும் மரத்தின் தண்டு பலத்த மழைக்குப் பிறகு உருவாகும் அழுத்தத்திற்கு நிவாரண வால்வாக செயல்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகி வரும் அந்த வீடியோவில் மரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதை பார்க்க முடிகிறது. மரத்திலிருந்து கொட்டும் இந்த நீரூற்றைக் காண பலர் இங்கு வருகிறார்கள். தரையிலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் மரத்தில் இருந்து தண்ணீர் பாய்கிறது.

உள்ளூர்வாசியான அமீர் ஹக்ரமாஜ் என்பவர் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில், “இந்த மரத்தின் கீழ் ஒரு நீரூற்று உள்ளது. இது மரத்தின் வெற்றுப் பகுதி வழியாக மேலே செல்கிறது. அதனால்தான் இந்த அழகான மற்றும் அரிய காட்சியைப் பெறுகிறோம்” என்கிறார்.

பனி உருகிய பிறகு அல்லது பலத்த மழைக்குப் பிறகு நிலத்தடி நீரூற்றுகள் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தம் மரத்தின் வெற்றுப் பகுதி வழியாக நீர் மேலே எழுகிறது. பின்னர் அது மரத்தின் இடைவெளி வழியாக வெளியேறுகிறது என்று இதற்கான காரணம் கூறப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்