பிரான்ஸில் கிடைத்த அதிர்ஷ்டம் – 73.5 மில்லியன் யூரோக்கள் வென்ற நபர்

பிரான்ஸில் அதிர்ஷ்டலாபச்சீட்டில் 73.5 மில்லியன் யூரோக்கள் வென்ற நபர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த சீட்டிழுப்பில் இத்தொகை வெல்லப்பட்டுள்ளதாக Euromillions அதிர்ஷ்டலாபச்சீட்டின் தாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
23, 31, 37, 42 மற்றும் 48 ஆகிய இலக்கங்களுடன், 3 மற்றும் 7 நட்சத்திர குறியீடு இலக்கங்களும் கொண்ட பற்றுச்சீட்டுக்கே இந்த அதிஷ்ட்டத்தொகை வெல்லப்பட்டுள்ளது.
இந்த பற்றுச்சீட்டினை கொண்டுள்ளவர்கள் அடுத்த 60 நாட்களுக்குள் தங்களது பணத்தை உரிமை கோரலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Euromillions அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பில் ஐரோப்பாவின் ஒன்பது நாடுகள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 40 times, 1 visits today)