கிரிந்த கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்

கிரிந்த கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண்ணும் ஆண் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண்ணும் குறித்த நபரும் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
35 வயதுடைய ஒருவரும், 33 வயதுடைய இரண்டு இந்திய பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இருவரும் கணவன்-மனைவி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சடலங்கள் தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 33 times, 1 visits today)