பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் சைனாடவுனில் தீ விபத்து ; 11 பேர் பலி!

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சைனாடவுன் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) வர்த்தகக் கட்டடம் தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்தாதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 7.30 மணியளவில் தீச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்து தீயணைப்பாளர்கள் பணியில் ஈடுபட்டதாகவும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்ததாகவும் தீயணைப்புத் துறை கூறியது.தீ மூண்டதற்கான காரணம் குறித்துத் தகவல் இல்லை.
உயிரிழந்தோரில் கட்டட உரிமையாளரின் மனைவியும் அடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.
கூடுதலானோர் அந்த வளாகத்தில் சிக்கி, தீயில் உயிரிழந்தனரா என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்பட்டது.
பிலிப்பீன்சில் கட்டடங்கள், வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் தீப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தும் அமலாக்க முறை பரவலாக நடப்பில் இல்லை.
(Visited 10 times, 1 visits today)