இலங்கையில் உள்ள உணவகம் ஒன்றில் தீவிபத்து!
 
																																		அக்குரணையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கண்டி – மாத்தளை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும் பல கடைகளுக்கு தீ பரவியதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (05) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரையில் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உணவகத்தில் சுமார் 50 எரிவாயு சிலிண்டர்கள் இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
(Visited 8 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
