ஸ்பெயினின் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து! பரிதமாக பறிப்போன உயிர்கள்
ஸ்பெயினின் வடக்கு நகரமான வில்லஃப்ராங்கா டெல் எப்ரோவில் உள்ள முதியோர் இல்லத்தில் தீப்பிடித்ததில் குறைந்தது 10 முதியவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு அறையிலிருந்து தீப்பிடித்தாக பிராந்தியத்தில் உள்ள தேசிய அரசாங்கத்தின் உயர் அதிகாரி பெர்னாண்டோ பெல்ட்ரான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் “ஜார்டின்ஸ் டி வில்லஃப்ராங்கா” இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.
அதிகாலை 5 மணியளவில் (0400 GMT) தீ தொடங்கியது, தீயணைப்பு வீரர்கள் அதை அணைக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனது என்று பிராந்திய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் மற்றும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,
(Visited 32 times, 1 visits today)





