இந்தியா செய்தி

டெல்லி வஜிராபாத்தில் உள்ள பொலிஸ் பயிற்சி பள்ளியில் தீ விபத்து

டெல்லி – வஜிராபாத்தில் (Wazirabad) உள்ள பொலிஸ் பயிற்சி பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 கார்கள் மற்றும் 250 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

பொலிஸ் பயிற்சி பாடசாலையின் ‘மல்கானா’ எனப்படும் களஞ்சிய பகுதியில் நள்ளிரவு 12.16 அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் எட்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!