யாழில் காதுகளால் வாகனம் இழுத்து சாதனை

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியை சேர்ந்த செல்லையா திருச்செல்வம் என்பவர் 1500 கிலோ கிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.
யாழ்.கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில் யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை, தமிழ்நாடு, கொழும்பு, யாழ்ப்பாணம் என முன்னர் பல தடைகள் செல்லையா திருச்செல்வம், தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்து சாதனைபுரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 31 times, 1 visits today)