வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 மகன்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தை

அமெரிக்காவின் ஒஹியா மாகாணத்தை சேர்ந்தவர் ஷாட் டொர்மென். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகன், 1 மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்தபோது டொர்மென் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன்களை சரமாரியாக சுட்டார்.

3 மகன்களையும் (மகன்களின் வயது 3,4 மற்றும் 7) வரிசையாக நிற்க வைத்த டொர்மென் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த டொர்மெனின் மனைவி துப்பாக்கிச்சூட்டை தடுக்க முயற்சித்தார். ஆனால், அவரையும் டொர்மென் சுட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மகள் வீட்டை விட்டு வேகமாக ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினரிடம் உதவிகேட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

Ohio man charged with murder after 3 young sons found shot, surviving daughter screaming her father was 'killing everyone'

அப்போது, துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டிற்கு சென்றபோது தாக்குதல் நடத்திய டொர்மென் வீட்டில் உள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தார். அவரை பொலிஸார் கைது செய்தனர். ஆனால், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏனினும் டொர்மெனின் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 மகன்களையும் சுட்டுக்கொன்ற டொர்மென் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

(Visited 11 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content