ஐரோப்பா

ரஷ்யாவை சேர்ந்த உலகின் தலைசிறந்த பாலே நடனக் கலைஞருக்கு பிரியா விடை!

உலகின் தலைசிறந்த பாலே நடனக் கலைஞர்களில் ஒருவரான ரஷ்யாவைச் சேர்ந்த 39 வயது விளாடிமிர் ஷ்க்லியாரோவுக்கு (Vladimir Shklyarov) பிரியா விடை வழங்கப்பட்டுள்ளது.

அவர் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த கடந்த 16ஆம் திகதியன்று அவரது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குடியிருப்பு கட்டிடத்தின்அருகில் உள்ள சிசிடிவி-யை ஆய்வு செய்தபோது கீழே விழுவது பதிவாகி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பாலே நடனக் கலைஞர்கள், துக்கம் தாளாமல் கண்ணீர் சிந்தினர்.

விளாடிமிர் ஷ்க்லியாரோவ் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது, சக பாலே நடனக் கலைஞர்கள் கை தட்டி விடை கொடுத்தனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!