டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல பாதள உலகக் குழு தலைவர்
டுபாய்யில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ரமேஷ் மிஹிரங்க என அழைக்கப்படும் மன்னா ரமேஷ் இன்று காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள குழுவினால் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் டுபாய் மாநிலத்தில் சிவப்பு பிடியாணை உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்னா ரமேஷை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன் பின்னர், அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தில் செயற்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மன்னா ரமேஷ், அவிசாவளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வர்த்தகர்களை மிரட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.