வட அமெரிக்கா

ஆன்மீக நிகழ்ச்சியில் தவளை விஷத்தை குடித்த பிரபல மெக்சிகன் நடிகை மரணம் !

வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ். இவர் மதச் சடங்குகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். அங்கு உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் சடங்கு என்று ஒரு சிலர் வினோத சடங்கை நடத்தியுள்ளனர். ராட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய தவளையின் விஷத்தை எடுத்துக் கொள்வதே இந்த சடங்காகும்.

ராட்சத இலை தவளை விஷம் நமது உடலில் சென்று, உடலில் இருக்கும் கெட்ட விஷயங்களை எல்லாம் அழித்துவிடும் என்பதாலேயே இதுபோல செய்கிறார்கள். ஆனால், அறிவியல் ரீதியாக இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இருந்த போதிலும் நடிகை மார்செலா இந்த சடங்கைச் செய்துள்ளார்.

இருப்பினும், சற்று நேரத்திலேயே அவருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்குப் போய் இருக்கிறது.இதனால் உடன் இருந்தவர்கள் மருத்துவமனை செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், தனது உடலை இப்போது சுத்தமாவதாகவும் அதன் ஒரு பகுதியே இது எனச் சொல்லி அவர் மருத்துவ உதவியை நாட மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் 1ஆம் திகதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேரம் செல்ல செல்ல நிலைமை மோசமாகியிருக்கிறது. இதையடுத்து நடிகை மார்செலா தனது தோழிக்குக் கால் செய்துள்ளார். அவரது தோழி அங்கு வருவதற்குள்ள மார்செலா உடல்நிலை மிக மோசமாகிவிட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ் மரணத்திற்கு மெக்சிகோவில் உள்ள பிரபல மபச்சே பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், இன்ஸ்டாகிராமிலும் பலரும் நடிகை மார்செலாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இதுபோன்ற சடங்குகளை யாரும் பின்பற்றக்கூடாது என்றும் பலரும் ட்வீட் செய்து வருகிறார்கள்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்