இலங்கை செய்தி

பிரபல ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணியாற்றியஇந்துனில் ஜயவர்தனவின் சடலம் இன்று (05) மோதரை கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

அவரது சடலம் மோதர லெல்லமேயில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் இவர் இரண்டு நாட்களாக தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி,  உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரின் மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை அறிய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துனில் ஜயவர்தன இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் வெளி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் இதற்கு முன்னர் லக்பிம பத்திரிகை மற்றும் ஸ்வர்ணவாஹினி போன்ற ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!