‘டோர் ஸ்டாப்பராக’ ஆஸ்கர் விருதை பயன்படுத்திய பிரபல ஹாலிவுட் நடிகை! – சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ
பிரபல ஹாலிவுட் நடிகையான க்வினெத் பேல்ட்ரோ தான் வென்ற ஆஸ்கர் விருதை கதவை நிறுத்தப் பயன்படுத்துவதாக வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகையும் மாடலுமான க்வினெத் பேல்ட்ரோன் கடந்த 1999ம் ஆண்டு, ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’ எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை எனும் ஆஸ்கர் விருதை வென்றார். இந்த நிலையில், அவரது சமீபத்திய பேட்டி ஒன்றில், அவருடைய வீட்டை சுற்றிக் காண்பித்துக் கொண்டே கேள்விகள் கேட்கப்பட்டது. அப்படி அவருடைய வீட்டிற்குள் நுழையும் போதே கதவை நிறுத்த அந்த ஆஸ்கர் விருதை அவர் பயன்படுத்தியது கேமிராவில் தெரியவந்து, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், ‘இந்த விருது இப்போது என் கதவை நிறுத்தப் பயன்படுகிறது (It’s my doorstop!)’ எனக் கூறியுள்ளார்.
பின்னர், இதை நான் விளையாட்டாகதான் கூறினேன் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், ரசிகர்கள் பலரும் இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ‘இது விளையாட்டு கிடையாது. அவர் எந்த கலை வடிவத்திலும் பங்கேற்கவில்லை என்றால் சரி. ஆனால், அதற்காக விருதை இப்படிப் பயன்படுத்துவது முறையல்ல’ எனக் கூறி வருகின்றனர்.
If you ever wondered where Gwyneth Paltrow keeps her Oscar… pic.twitter.com/TFKJ2NtY7Z
— Gary Hartley (@GaryHartleySA) October 9, 2023
இதேபோன்று முன்னொருமுறை, நடிகர் நசீருதீன் ஷா அவருடைய ஃபிலிம்பேர் விருதுகளை தனது பண்ணை வீட்டின் கழிவறையில் கதவு கைப்பிடியாக பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். ’அக்ரோஷ்’, ’சக்ரா’ மற்றும் ’மசூம்’ படங்களில் நடித்ததற்காக மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற நசீருதீன் ஷா, பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ”அந்த விருதுகளைப் பற்றி நான் பெருமைப்படுவதில்லை.
எனக்கு அறிவிக்கப்பட்ட கடைசி இரண்டு விருதுகளை கூட நான் வாங்க போகவில்லை. எனவே, நான் ஒரு பண்ணை வீட்டைக் கட்டியபோது இந்த விருதுகளை அங்கேயே வைக்க முடிவு செய்தேன். ஃபிலிம்ஃபேர் விருதுகளால் கைப்பிடிகள் செய்யப்பட்டிருப்பதால், கழிவறைக்குச் செல்பவருக்கு தலா இரண்டு விருதுகள் கிடைக்கும்” எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.