Site icon Tamil News

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த குடும்பஸ்தர்!

திருகோணமலை -மொரவெவ, நாமல்வத்தை காட்டுப்பகுதியில் கால்நடைகளை காவல்காத்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மொரவெவ பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நாமல்வத்தை காட்டுப்பகுதியில் கால்நடைகளை காவல்காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை இன்று (04) அதிகாலை காட்டு யானை தாக்கியுள்ளது.

இத்தாக்குதலில் அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ. நியாஸ் ( 42) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.குறித்த நபர் உறங்கிக் கொண்டிருக்கும்போதே யானை ஏறி மிதித்துக் கொண்டு சென்றதாக தெரிய வருகின்றது.

Exit mobile version