இலங்கையில் பாரிய விபத்தில் இருந்து தப்பிய குடும்பம்
இலங்கையில் பாரிய விபத்தில் இருந்து குடும்பம் ஒன்று காயமின்றி தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த குடும்பம் ஒன்று பயணித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் குயில்வத்தை பகுதியில் இன்று அதிகாலை 5.15 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரின் சாரதி தூங்கியதால், கார் வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டம் ஒன்றிற்குள் புகுந்துள்ளது.
இவ்விபத்தில் காரில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 37 times, 1 visits today)





