ஸ்கொட்லாந்தில் 180,000 தேனீக்களுடன் 7 ஆண்டுகள் வாழ்ந்த குடும்பம்
ஸ்கொட்லாந்தில் வீடு ஒன்றில் இருந்து 180,000 தேனீக்கள் அகற்றப்பட்டுள்ளன.
இன்வர்னெஸ் நகரில் உள்ள வீட்டில் தேனீக்கள் இருப்பது தெரியாமலேயே குடும்பம் 6 அல்லது 7 ஆண்டு வாழ்ந்திருக்கலாம் என்று தேனீக்களை அகற்றிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேனீக்கள் 3 கூட்டங்களாக இருப்பது அடையாளம் காணப்பட்டது. ஒவ்வொரு கூட்டத்திலும் 6,000 தேனீக்கள் வரை இருக்கும் என்று Loch Ness Honey Company எனும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அந்த நிறுவனம் தேனைத் தயாரித்து வருகிறது. குடும்பம் அவ்வளவாகப் பயன்படுத்தாத படுக்கை அறையிலும் அதன் அருகே உள்ள குளியலறையிலும் தேனீக்கள் இருந்தன.
அவை கூரையில் ஓர் இடைவெளிகூட விட்டுவைக்காமல் அடுக்கடுக்காக இருப்பதை நிறுவனத்தின் காணொளியில் பார்க்கமுடிகிறது.
தேனீக்கள் கூட்டங்களில் ஒன்று 6, 7 ஆண்டுகளாக வீட்டில் இருந்திருக்கும்… இன்னொரு கூட்டம் 3 ஆண்டுகள் இருந்திருக்கும்… மூன்றாவது கூட்டம் ஒன்றரை மாதத்துக்கு முன் உருவாகியிருக்கும் என்று Loch Ness Honey Company குறிப்பிட்டுள்ள.
பேரப்பிள்ளைகள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் தேனீக்களின் சத்தம் கேட்டதாய்க் கூறியதை வீட்டின் உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.