ட்ரம்பின் முடிவால் ஆபத்தில் சிக்கிய ஐரோப்பிய நாடு! கைவிட்ட அமெரிக்கா!
ஐரோப்பிய நாடுகளின் வான்வெளிக்குள் ரஷ்யா அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
இந்நிலையில் ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியை அமெரிக்கா பாதுகாப்பது முக்கியமானது என சர்வதேச அரசியல் நோக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
ருமேனியாவில் அமெரிக்கா தனது துருப்புக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டங்களை வெளியிட்டுள்ள நிலையில் அரசியல் அவதானிகளின் இந்த கருத்து வந்துள்ளது.
ருமேனியா, உக்ரைனுக்கு அருகாமையில் உள்ளமையால் அமெரிக்கா மேற்படி தனது முடிவை அறிவித்திருந்தது.
‘அமெரிக்க இராணுவப் படைகளின் உலகளாவிய நிலையை மறுமதிப்பீடு செய்யும் செயல்முறையின் ஒரு பகுதியாக, நேட்டோவின் கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களின் ஒரு பகுதியின் அளவை மாற்றுவது குறித்து அமெரிக்கா அறிவித்துள்ளதாக ருமேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் சுமார் 1000 அமெரிக்க துருப்புக்கள் ருமேனியாவில் நிலைநிறுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 75 ஆண்டுகளாக ஐரோப்பாவைப் பாதுகாக்க அமெரிக்க இராணுவ சக்தி உதவியுள்ளது. இருப்பினும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் எடுக்கப்பட்ட நேட்டோ படைகளுக்கான செலவீனத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல முடிவுகள் ஆரம்பக்கால செயற்பாடுகளை மாற்றியுள்ளன.
இது எதிரி நாடுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து புதிய இராணுவத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தையும், அமெரிக்காவை இனிமேலும் நம்பிக்கொண்டிருப்பதால் ஏற்படும் ஆபத்துக்களையும் இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகின்றது.





