ரயிலில் இருந்து விழுந்த நெதர்லாந்து பிரஜை

நெதர்லாந்து நாட்டு சுற்றுலா பயணியான முல்டர்ஸ் சேர்ஜ் என்பவர் இலங்கையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
49 வயதான குறித்த நபர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது நானுஓயா புகையிரத நிலையத்திற்கும் அம்பேவெல புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
(Visited 13 times, 1 visits today)