இலங்கை

அமெரிக்காவிலிருந்து விவசாயி ஒருவருக்கு வந்த 10 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் பொதி!

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான மெத்தம்பட்டமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்று, விமான நிலையத்துக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் குறித்த பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்காவின் குவாத்தமாலா மாநிலத்தில் இருந்து குறித்த பொதி மிகவும் நூதனமான முறையில் அனுப்பப்பட்டுள்ளது.

பொலன்னறுவை ஜயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விவசாயி ஒருவரின் முகவரிக்கு குறித்த போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொதியை விவசாயி எடுக்க வந்த போது, ​​பொதியை திறந்து பரிசோதித்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

03 கிலோ 101 கிராம் எடையுள்ள மெத்தம்பேட்டமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் இந்த பொதியில் இருந்துள்ளது.

கைது செய்யப்பட்ட விவசாயி மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்