நாணய பெறுமதியில் வீழ்ச்சி – ஈரானில் மாபெரும் போராட்டம்!
அமெரிக்க டொலருக்கு எதிரான ஈரானின் நாணய மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து மத்திய வங்கியின் தலைவர் முகமது ரெசா ஃபர்சின் (Mohammad Reza Farzin) பதவி விலகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அதே நேரத்தில் தெஹ்ரான் நகர மையத்தில் உள்ள தெருக்களில் போராட்டக்காரர்கள் அணிவகுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தெஹ்ரானில் சில இடங்களில், போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
22 வயதான மஹ்சா ஜினா அமினி (Mahsa Jina Amini) சிறைகாவலில் உயிரிழந்த சமயம் இடம்பெற்ற போராட்டங்களை தொடர்ந்து நேற்றுதான் பாரிய அளவிலான போராட்டம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.





