01 நிமிடத்தில் 21 காலுறைகளை கழற்றி கின்னஸ் சாதனை படைத்த நாய் (video)
கனேடியன் நாய் ஒன்று ஒரு நிமிடத்தில் தன்னார்வலர்கள் அணிந்திருந்த 21 காலுறைகளை அகற்றி கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
லோ ஷோ டீ ரெக்கார்ட் (Lo Show Dei Record) என்ற தொலைக்காட்சித் தொடரின் தொகுப்பில் சாதனை படைக்க அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற பெண், ஃப்ரேஸர் என்ற அவரது வளர்ப்பு பிராணியுடன் இத்தாலிக்குச் சென்றார்.
அங்கு வரிசையில் அமர்ந்திருந்த 11 பெண்களின் காலில் இருந்து காலுறைகளை கழற்றுமாறு , ஃப்ரேசருக்கு கட்டளைகளை வழங்கினார்.
ஃப்ரேசர் தனது முதல் முயற்சியில் 20 காலுறைகளை அகற்றி, லிலு என்ற கலிபோர்னியா நாயின் சாதனையை சமன் செய்தது. ஆனால் இரண்டாவது முயற்சியில் 21 காலுறைகளை கழற்றி லிலுவின் சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது.
(Visited 10 times, 1 visits today)





