இந்தியா

இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொலை; இரு இளைஞர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு

மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற குரல் இந்தியாவில் ஓங்கி ஒலித்துவரும் வேளையில், டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.

டெல்லியின் தென்கிழக்கு வட்டாரத்தில் உள்ள நிமா மருத்துவமனை என்னும் சிறிய மருந்தகத்தில் பணியில் இருந்த மருத்துவரான ஜாவேத் அக்தர் என்பவர் வியாழக்கிழமை (அக்டோபர் 3) விடியற்காலை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அந்தச் சம்பவம் குறித்து விடியற்காலை 1.45 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக டெல்லி காவல்துறை கூறியது.

முன்னதாக, 1 மணியளவில் 16, 17 வயதுடைய இருவர் மருத்துவமனைக்குள் நுழைந்ததாகவும் அவர்களில் ஒருவரின் கால் விரலில் காயத்துக்குக் கட்டுப்போடப்பட்டு இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணை தெரிவிக்கிறது.

மருந்துச் சீட்டு வாங்குவதற்காக மருத்துவர் ஜாவேத் அக்தர் இருந்த அறைக்குள் அவ்விருவரும் நுழைந்ததாகவும் சிறிது நேரத்தில் துப்பாக்கிச்சுடும் சத்தத்தை மருத்துவமனை ஊழியர்களான கஜாலா பர்வீன், கமில் ஆகிய இருவரும் கேட்டனர்.உடனடியாக, மருத்துவரின் அறையை நோக்கி ஓடிய பர்வீன், அங்கு ரத்தவெள்ளத்தில் மருத்துவர் கிடந்ததைக் கண்டார்.இவ்வாறு விளக்கிய தென்கிழக்கு டெல்லி காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் டியோ, இது திட்டமிட்ட கொலை என்று கூறினார்.

மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.முதல் நாள் இரவு அதே மருத்துவமனைக்கு அந்த இரு இளையர்கள் வந்ததையும் அவர்களில் ஒருவரின் காலில் ஏற்பட்டு இருந்த காயத்துக்குக் கட்டு போடப்பட்டதையும் சிசிடிவி படங்கள் காட்டின.

ஆகஸ்ட் மாதம் கோல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.அந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியதுடன் பணியில் இருக்கும் மருத்துவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ள வேளையில் டெல்லி மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்து உள்ளது

(Visited 55 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே