யாழ். உடுத்துறை கடற்கரையில் கரையொதுங்கிய அலங்கரிக்கப்பட்ட மர்ம ரதம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் இன்று புதன்கிழமை (27) கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது.
இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.
(Visited 11 times, 1 visits today)