அமெரிக்காவில் வேகமாக பரவும் ஆபத்தான் பூஞ்சை
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் ஆபத்தான பூஞ்சை தொற்று குறித்த தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பூஞ்சை தொற்று பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டாலும், ஒரு மாதத்திற்குள் வாஷிங்டனில் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் உலகத்தின் கவனம் இதில் குவிந்துள்ளது.
மிக விரைவில் தொற்று ஏற்படக்கூடிய கேண்டிடா ஆரிஸை மருந்துகளின் மூலம் குணப்படுத்துவது கடினம் என்று கூறப்படுகிறது.
கேண்டிடா ஆரிஸ் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளை எளிதில் பாதிக்கலாம் என்றும், ஆக்ஸிஜன் குழாய்கள் மற்றும் வடிகுழாய்களைப் பயன்படுத்தும் நோயாளிகள் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
திறந்த காயங்கள் மற்றும் காதுகளில் கேண்டிடா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.