இலங்கை

நல்லூர் ஆலய சூழலில் உச்சம் தொட்ட ஒரு கோப்பை பால் தேநீர்! மக்கள் குற்றம்சாட்டு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா வினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் தனது கிளை நிறுவனம் ஒன்றினை இன்றைய தினம் ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை கொடியேற்ற உற்சவத்துக்கு சென்ற மக்கள் சிலர் அங்கு பால் தேநீர் பருக சென்ற போது ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாக்கு விற்கப்படுவதாக தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் கூட ஒரு கோப்பை பால் தேநீர் இவ்வளவு விலைக்கு விற்கப்படவில்லை என குற்றம் சாட்டும் மக்கள் இவ்வாறு அதிக விலையில் விற்பனை செய்வதை நுகர்வோர் அதிகார சபையினரும் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குறித்த உணவகத்தின் உணவு பொருட்களின் விலைகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 14 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!