சிங்கப்பூரில் கடை வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
சிங்கப்பூரில் கடை வைத்திருப்பவர்களின் நிலைமையை நெருக்கடிகள் ஆட்டம் காண வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வாடகை மற்றும் உயரும் செலவுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதாவது எகிறும் இந்த செலவினங்கள் முக்கிய பகுதிகளில் காபி கடைகள் நடத்தும் வியாபாரிகள் காலி செய்ய காரணமாக அமைவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கடைகளுக்கான வாடகைகள் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சில வியாபாரிகள் கூறுகின்றன.
சமீபத்திய பொது பயனீட்டு கட்டணம் அதிகரிப்பும் இதற்கான மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.
கோடிக்கணக்கில் செலவு செய்து காபி கடைகள் வாங்கப்படுவதும், அதிக வாடகைச் சூழலுக்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனால் குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள காபி கடைகளை பலர் காலி செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)