டிரம்ப்பின் வரவால் உக்ரைனுக்கு காத்திருக்கும் நெருக்கடி : ஹங்கேரிய பிரதமர் கடும் எச்சரிக்கை
டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு உதவ மாட்டார் என்று ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கான டொனால்ட் டிரம்ப்பின் முயற்சியை ஆதரிக்கும் ஆர்பன், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணியில் இருக்கும் டிரம்பை வெள்ளிக்கிழமை புளோரிடாவில் சந்தித்து பேசிய பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“உக்ரைன்-ரஷ்யா போருக்கு அவர் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டார், எனவே போர் முடிவுக்கு வரும்” என்று ஹங்கேரிய பிரதமர் ஞாயிற்றுக்கிழமை மாலை அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
“உக்ரைன் அதன் சொந்த காலில் நிற்க முடியாது என்பது வெளிப்படையானது.”
“அமெரிக்கர்கள் பணம் மற்றும் ஆயுதங்கள் கொடுக்கவில்லை என்றால், ஐரோப்பியர்கள் கூட, இந்த போர் முடிந்துவிடும். அமெரிக்கர்கள் பணம் கொடுக்கவில்லை என்றால், ஐரோப்பியர்கள் இந்த போருக்கு சொந்தமாக நிதியளிக்க முடியாது, பின்னர் போர் முடிவடையும்” என்றார்.