இலங்கை செய்தி

தொகுதி அமைப்பாளர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த சம்பத் கமகே, அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம, பனாகொட சமகி மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவரின் தலையில் தடியால் தாக்கப்பட்டதாகவும், பலத்த காயமடைந்த சம்பத் கமகே ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், திருமணத்துக்குப் புறம்பான உறவு குறித்த உண்மைகளும் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொலையை செய்த சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

உயிரிழந்தவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி ஹினிதும தொகுதியின் பிரதம அமைப்பாளராக இருந்தவர் என்என்றும்ஐகக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஆதரவை தெரிவித்ததாகவும் நுகேகொட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

(Visited 49 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!