இலங்கையில் கிரிகெட்டின் வளர்ச்சிக்காக குழுவொன்று நியமனம்!
இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும், 03 பேர் கொண்ட சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.
அதன்படி, குறித்த குழுவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிதத் வெட்டிமுனி, இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் சட்ட ஆலோசகர் ரகித ராஜபக்ஷ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தக் குழு, “இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட் கவுன்சில்கள், கூட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் கண்காணிக்கவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் மற்றும் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கவும்” நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.