இலங்கை

ஆஸ்திரேலிய உயர்ஸ்த்தானிகரால் மட்டக்களப்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு நிலையம்

அவுஸ்திரேலிய உயர்ஸ்த்தானிகர் சோபியா வில்கின்சனினால் மட்டக்களப்பில் முதன்முறையாக குழந்தைகள் பராமரிப்பு நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

சென் மேரிஸ் மோன்டேசரி ஹவுஸ் குழந்தைகள் பராமரிப்பு நிலைய பொறுப்பதிகாரி திருமதி ரஜினி பிரான்சிஸ் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில், சர்வேதயா நிருவனத்தின் தலைவர் வின்யா ஆரியரத்ன, கொமர்சல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் சனத் மானதுங்க, சர்வதேச நிதி நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான முகாமையாளர் அலிஜன்ரொ, இந்நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் நிமாலி எஸ்குமாரி (சர்வோதயம்), மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் (சர்வோதயம்) வேனுஸ்ரீ புவனேந்திரராஜா உள்ளிட்ட சர்வோதயம் மற்றும் சென் மேரிஸ் மோன்டேசரி ஹவுஸ் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது குறித்த பராமரிப்பு நிலையம் அதிதிகளினால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதுடன், சிறார்களின் கண்கவர் நடனம் மற்றும் பாடல்கள் என்பன நிகழ்வை அலங்கரித்ததுடன், சிறார்களினால் அதிதிகளுக்கு அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டது.

குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் தொடர்பாடலை விருத்தி செய்வதன் மூலம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடிவதோடு ஆரோக்கியமான பிரஜைகளா இவர்களை உருவாக்க முடியுமெனவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு நிலையமாக இது அமையுமென தான் நம்புவதாகவும் இதன்போது அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தனது உரையில்
தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் சிறுவர்களை பராமரிப்பதற்கான நிலையம் இன்மையால் தொழில்புரியும் பெற்றோர்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், மாவட்டத்தில் முதலாவது குழந்தைகள் பராமரிப்பு நிலையமாக இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!