ஜெர்மனியில் இளைஞர்கள் மனநிலையில் மாற்றம் – குழந்தை பிறப்பில் சிக்கல்
ஜெர்மனியில் பிறப்பு விகிதம் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியின் புள்ளி விபரம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஜீன் மாதம் வரையிலான காலப்பகுதியில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 392 000 பிள்ளைகள் பிறந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமை நீடிக்குமானால் ஜெர்மனியில் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி ஜெர்மனியில் எதிர்கால பொருளாதார ரீதியில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்படடுள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் நாட்டிலுள்ள முக்கிய பணிகளுக்கு வெளிநாட்டவர்களை அழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமகாலத்தில் இளைஞர், யுவதிகளில் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பமான மனநிலையே குழந்தை பிறப்பில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.