ஜெர்மனியில் வரி முறையில் ஏற்படவுள்ள மாற்றம் – அமுலாகும் புதிய நடைமுறை
ஜெர்மனியில் 2025 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஒரு பகுதியாக, வரி முறையில் சில மாற்றங்களைக் காணப்படவுள்ளது.
அதற்கமைய, ஜெர்மனியில் கணவன் மற்றும் மனைவி வருமான வரி செலுத்துவது தொடர்பாக நிதி அமைச்சர் புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெர்மனியில் திருமணம் முடித்த தம்பதியினருக்கு ஸ்டொயக்லேஸ் (STEUERKLASSE) எனப்படும்ம் வருமான வரி இலக்குகள் 5 மற்றும் 3 ஆக காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண்கள் கூடுதலான வகையில் 5 என்று சொல்லப்படும் வரி வகுப்பை வைத்து இருந்த காரணத்தினால் இவரிகளின் ஊதியமானது மிகவும் குறைவாக காணப்பட்டுள்ளது.
இதேவேளையில் ஆண்கள் மற்றும் பெண்களை சமத்துவமாக பேண வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் எதிர் வரும் காலங்களில் ஸ்டொயக்லேஸ் (STEUERKLASSE) என்று சொல்லப்படும் இலக்கானது 4×4 ஆக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பான சுற்று நிருபங்களை ஜெர்மனியின் நிதி அமைச்சர் தொடர்புடைய நிதி கணக்காளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் வருமான வரி செலுத்தும் பொழுது அடிப்படை சம்பளத்தில் தற்பொழுது சம்பளம் அதிகரிப்பட்டுள்ளது.